/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ஆத்மா' திட்டத்தின் மூலம் 63 ஆயிரம் விவசாயிகள் பலன்
/
'ஆத்மா' திட்டத்தின் மூலம் 63 ஆயிரம் விவசாயிகள் பலன்
'ஆத்மா' திட்டத்தின் மூலம் 63 ஆயிரம் விவசாயிகள் பலன்
'ஆத்மா' திட்டத்தின் மூலம் 63 ஆயிரம் விவசாயிகள் பலன்
ADDED : ஜூலை 28, 2025 02:08 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 'ஆத்மா திட்டத்தின்' மூலம் 63 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழக வேளாண் துறை சார்பில், தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் படி (ஆத்மா) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி, விவசாயிகளுக்கான பயிற்சிகள், செயல் விளக்கங்கள், கண்டுணர்வு சுற்றுலாக்கள், வயல்தின விழா, பண்ணைப் பள்ளி ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆத்மா திட்டத்தின்படி, 2023-24ம் நிதி ஆண்டில், 13 ஆயிரத்து 743 விவசாயிகள் பயனடைந்தனர். இதேபோல், 2024-25ம் நிதி ஆண்டில், 49 ஆயிரத்து 553 விவசாயிகளும், 2025-26ம் நிதி ஆண்டில், 41 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக 4 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.