/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.63.71 லட்சம் மதிப்பில் சாலை அமைச்சர் துவக்கி வைப்பு
/
ரூ.63.71 லட்சம் மதிப்பில் சாலை அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.63.71 லட்சம் மதிப்பில் சாலை அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.63.71 லட்சம் மதிப்பில் சாலை அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 22, 2024 02:36 AM

செஞ்சி: ரெட்டிப்பாளையத்தில் 63.71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போடும் பணி துவங்கியது.
செஞ்சி அடுத்த ரெட்டிப்பாளையம் முதல் மல்லாண்டி வரை 63.71 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.680 கி.மீ., துாரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை திக்காமேடு கெங்கையம்மன்கோவில் அருகே நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் கேமல் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் முத்தம்மாள் சேகர் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், பணி மேற்பார்வையாளர் அருணாசலம் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.