/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு 6,395 பேர் பங்கேற்பு; 2,098 பேர் அப்சென்ட்

ADDED : ஜூன் 15, 2025 11:45 PM

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் குருப் 1 ஏ தேர்வை 6,395 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குருப் 1 மற்றும் குருப் 1 ஏ நேற்று நடந்தது. இந்த தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் வட்டத்தை தலைமையிடமாக கொண்டு 13 தேர்வு மையங்களில் 28 அறைகளிலும், திண்டிவனம் வட்டத்தை தலைமையிடமாக கொண்டு 4 தேர்வு மையங்களில் 6 அறைகள் என மொத்தம் 17 தேர்வு மையங்களில் 34 அறைகளில் நடந்தது.
இந்த தேர்வில் பங்கேற்க, 8 ஆயிரத்து 493 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6 ஆயிரத்து 395 தேர்வர்கள் தேர்வெழுத வந்தனர். 2 ஆயிரத்து 98 தேர்வர்கள் தேர்வு எழுத வராமல் அப்செண்ட் ஆகினர். 75.03 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்வெழுதினர். 24.70 சதவீதம் தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வு பணிகளை கண்காணிக்கும் பணிகளில் பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மையங்களில் நடந்த தேர்வை, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.