/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராபிக் விதி மீறியதாக 6,531 வழக்குகள் பதிவு
/
டிராபிக் விதி மீறியதாக 6,531 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 20, 2024 05:50 AM
விழுப்புரம் : பொங்கலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டத்தில், கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 376 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, 12 பைக்குகள், மது பாட்டில்கள், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாடிய 59 பேர், குட்கா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டு, 10 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா வழக்கில் ஒருவர், லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் மற்றும் பொது இடங்களில் குடிபோதையில் தகராறு செய்த 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு, மதுபோதையில் வாகனம் ஓட்டியது உட்பட பல்வேறு வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 6,531பேர் மீது வழக்குப் பதிந்து 250 பேரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.