UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:45 PM
அவலுார்பேட்டை: வளத்தி அருகே முன்விரோதம் காரணமாக சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளத்தி அடுத்த சண்டிசாட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 60; இவரது அண்ணன் ஏழுமலை, 74; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான பொது கிணற்றில், மணி நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் இறைக்கச் சென்றார்.
மோட்டாரில் பியூஸ் கேரியர் இல்லாத நிலையில் ஒயர் மூலம் மின் இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த ஏழுமலை தரப்பினர், மணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த மணி செஞ்சி அரசு மருத்துவமனையிலும், ஏழுமலை சென்னை, குரோம்பேட்டை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ஏழுமலை, மணி உட்பட 7 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன்.
