ADDED : ஏப் 12, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி :  விக்கிரவாண்டியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து நாய் கடித்ததில் 7 ஆடுகள் இறந்தன.
விக்கிரவாண்டி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார்.
நேற்று மதியம் 12:45 மணியளவில் அப்பகுதியில் சுற்றியிருந்த நாய் பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

