/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து 710 பஸ்கள் இயக்கம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் தகவல்

ADDED : ஜன 30, 2024 06:36 AM
விழுப்புரம் : ''தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும்'' என, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்து.
அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு:
சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது.
முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. கடந்த 24ம் தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இன்று 30ம் தேதி முதல், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 710 பஸ்கள் கிளாம்பாக்கத்திலிருந்தும், 160 பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட மாட்டாது.
இந்த பஸ் இயக்க மாற்றத்தினால், பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் கோட்ட பஸ்கள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சென்றடையும். பிறகு கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்.