/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 77வது குடியரசு தின விழா... கொண்டாட்டம்:கலெக்டர் தேசியக் கொடி ஏற்றினார்
/
விழுப்புரத்தில் 77வது குடியரசு தின விழா... கொண்டாட்டம்:கலெக்டர் தேசியக் கொடி ஏற்றினார்
விழுப்புரத்தில் 77வது குடியரசு தின விழா... கொண்டாட்டம்:கலெக்டர் தேசியக் கொடி ஏற்றினார்
விழுப்புரத்தில் 77வது குடியரசு தின விழா... கொண்டாட்டம்:கலெக்டர் தேசியக் கொடி ஏற்றினார்
ADDED : ஜன 27, 2026 04:22 AM

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில், 77வது குடியரசு தின விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 8:05 மணிக்கு கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அமைதியை வெளிப்படுத்தும் விதமாக வெண் புறாக்களும், வண்ண பலுான்களும் பறக்கவிடப்பட்டது.
தொடர்ந்து, எஸ்.பி., சாய் பிரனீத்துடன், கலெக்டர் திறந்து வெளி ஜீப்பில் சென்று, காவல் துறையினரின் மரியாதையை ஏற்றார். பின், இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் காவல்துறை ஆயுதப்படையினரின் அணி வகுப்பு நடந்தது.
இதனையடுத்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, அனைத்து துறைகளைச் சேர்ந்த 353 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 26 காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 96 காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட நீதிபதி மணிமொழி, டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி., சாய்பிரனீத், எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி லட்சுமணன், சிவக்குமார், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி, ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், அது சீர்படுத்தப்பட்டு, குடியரசு தின விழா நேற்று நடந்தது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்ததால், மைதானத்திலும், அதன் வாயில் பகுதியிலும் மழைநீர் தேங்கியது.
இதனால், விழாவிற்காக நேற்று அதிகாலை முதல், மைதானத்தில் கிராவல் மண் கொட்டியும், மழைநீர் தேங்கி சகதியான பகுதிகளையும், அரசு துறையினர் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மழைநீர் தேங்கி ஈரப்பதம் அதிகரித்திருந்ததால், எளிமையாக விழா நடத்தி முடிக்கப்பட்டது. இதனால், இந்தாண்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு சீறுடை குழுவினரின் அணிவகுப்பும் கைவிடப்பட்டது.

