/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் திருட்டு
ADDED : ஆக 08, 2025 11:56 PM
திண்டிவனம் : வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம், கோட்டை மேடு, செந்தமிழ்நகரை சேர்ந்தவர் சாதிக்பாஷா, 55; இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் ஊரப்பாக்கத்தில் படித்து வருகின்றனர்.
இதனால் சாதிக்பாஷா அடிக்கடி வீட்டை பூட்டிவிட்டு, ஊரப்பாக்கம் செல்வது வழக்கம். இதே போல் கடந்த 10 நாட்களாக ஊரப்பாக்கத்தில் இருந்தவர் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சாதிக்பாஷா திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.