/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் 8,388 விவசாயிகள் அடையாள எண் பதிவேற்றம்
/
வானுாரில் 8,388 விவசாயிகள் அடையாள எண் பதிவேற்றம்
ADDED : மார் 30, 2025 02:56 AM
வானுார் : வானுார் தாலுகாவில் 8,388 விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் செய்திக் குறிப்பு:
வானுார் தாலுகாவில் அனைத்து விவசாயிகளுக்கும், தேசிய அளவில் விவசாய அடையாள எண் கணினியில் உருவாக்கும் பணி கடந்த ஒரு மாதமாக அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.
வானுார் தாலுகாவில் 14 ஆயிரத்து 475 விவசாயிகளில், இதுவரை 8,388 விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது.
அடையாள எண் உருவாக்கப்படாத விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டானுார், இரும்பை, பூத்துறை, கோட்டக்குப்பம் மற்றும் பொம்மையார்பாளையம் கிராமத்தில் உள்ள நிலம் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள் புதுச்சேரியில் வசிக்கின்றனர்.
இதனால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்த திட்டத்தில் உடனடியாக அடையாள எண் உருவாக்கிட அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.