/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எண்ணெய் வித்து உற்பத்திக்கான இலக்கு... 9,880 ஏக்கர்! விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.7 கோடியில் செயல்திட்டம்
/
எண்ணெய் வித்து உற்பத்திக்கான இலக்கு... 9,880 ஏக்கர்! விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.7 கோடியில் செயல்திட்டம்
எண்ணெய் வித்து உற்பத்திக்கான இலக்கு... 9,880 ஏக்கர்! விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.7 கோடியில் செயல்திட்டம்
எண்ணெய் வித்து உற்பத்திக்கான இலக்கு... 9,880 ஏக்கர்! விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.7 கோடியில் செயல்திட்டம்
ADDED : ஜூலை 10, 2025 09:38 PM

விழுப்புரம்; மாவட்டத்தில், எண்ணெய் வித்து உற்பத்தியை, 9,980 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் வித்துக்கள் திட்டத்தினை திறம்பட செயல்படுத்தி, கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட அளவிலான எண்ணெய் வித்து இயக்கம் அமைத்திட, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்ட எண்ணெய் வித்து இயக்கத் தலைவராக கலெக்டர், உறுப்பினர்களாக வேளாண்மை இணை இயக்குநர், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர், வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) மேலாளர், நபார்டு வங்கி மேலாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர் மற்றும் மதிப்பு கூட்டு பங்குதாரர்களான 8 உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, வேளாண் சந்தைக்படுத்துதல், வணிகத்துறையுடன் ஒருங்கிணைந்து எண்ணெய் வித்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்க, தடையின்றி உற்பத்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வித்துக்களை மதிப்புக் கூட்டுதல் செய்திடவும், மதிப்புச் சங்கிலி பங்குதாரர்கள் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட திருவெண்ணெய்நல்லுார், கண்டமங்கலம் ஒன்றியங்களை தவிர்த்து 11 ஒன்றியங்களில் மொத்தம் 9,980 ஏக்கர் பரப்பளவில், மதிப்புச் சங்கிலி தொகுப்புகள் கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் குறைந்தபட்சம் 494 ஏக்கர் அடங்கிய தொகுப்புகளாக உருவாக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்குள் அறிவிக்கை செய்யப்பட்ட மணிலா ரக விதைகள், ஏக்கருக்கு ரூ.4,615 மானியத்துடன், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ,100 கிலோ வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பும் விவசாயிகள் அந்த வட்டார பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது மதிப்பு கூட்டு பங்குதாரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள குழு, இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை விலை மதிப்பு கூட்டி, விவசாயிகளுக்கு அதிக லாபம் பெற வழி வகை செய்யப்படுகிறது.
இதேபோல் மொத்தம், 37 ஆயிரத்து 50 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குறைந்தபட்சம், 50 ஏக்கர் பரப்பில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
மேலும், ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 668 மானிய உதவியுடன் இடுபொருட்கள் மற்றும் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மரவகை எண்ணெய் வித்து பயிரான வேம்பு, புங்க மரம் ஆகிய மரங்களில் ஊடு பயிரிடுவதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 405 மானியமும், பராமரிப்பதற்கு ரூ. 810 மானியம் என மொத்தம் 123 ஏக்கர் பரப்பிற்கு ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் வித்துக்கள் திட்டத்தினை, ரூ. 7 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

