ADDED : பிப் 01, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகேயுள்ள கன்னிகாபுரத்தில் கண்டெய்னர்லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருபவர் ஹேமகுமார், 32; இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த கார் மயிலம் அடுத்த கன்னிகாபுரம் கிராமம் அருகே நேற்றுகாலை 9:00 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார் டிரைவர் இக்பால் மற்றும் ஆயுதப்படை போலீசார் ஹேமகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.