ADDED : பிப் 15, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. மழவராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 65; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் அருள்தாஸ் ஏமப்பூர் அரசு பள்ளி அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், அருள்தாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.