/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், ராகவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவருக்கு சொந்தமான நிலம் பானாம்பட்டு பகுதியில் உள்ளது. இந்த நிலத்திற்கு சக்திவேல் நேற்று முன்தினம் சென்ற போது, வழியருகே அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 22; என்பவர் பைக்கில் அமர்ந்தபடி வழியை மறித்துள்ளார்.
சக்திவேல், அவரிடம் பைக்கை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், சக்திவேலை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.