/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு
/
வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு
வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு
வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு
ADDED : மார் 06, 2024 02:20 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வடமாநில நபரை தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவிட்டு, பீதி ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத் தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர், அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குழந்தை கடத்தல் நபர் என்று சந்தேகமடைந்து அவரை தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவ வீடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது.
இதுகுறித்து அய்யங்கோவில்பட்டு வி.ஏ.ஓ., வினோத்குமார், 35; வாலிபர் தாக்கப்படுவதை வீடியோ எடுத்து பொதுமக்களிடை யே பீதி ஏற்படுத்திய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தார்.
அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், அப்பகுதியினர் சிலர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

