/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு
/
வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு
ADDED : அக் 16, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் 20 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் அருந்ததியர் தெருவில் உள்ள ராஜா, 40; என்பவரது வீட்டின் பின்புறத்தில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ கொண்ட, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து, ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.