/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு
/
செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாட்டு வண்டியில் செம்மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வளவனூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை குளக்கரை பகுதியில், கல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கந்தவேல், 57; என்பவர், தனது மாட்டு வண்டியில், அனுமதியின்றி செம்மண் ஏற்றி சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார், மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வளவனூர் போலீசார், கந்தவேல் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.