/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழவழப்பான சாலையில் தொடரும் விபத்து; செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
/
வழவழப்பான சாலையில் தொடரும் விபத்து; செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
வழவழப்பான சாலையில் தொடரும் விபத்து; செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
வழவழப்பான சாலையில் தொடரும் விபத்து; செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி
ADDED : அக் 16, 2024 07:46 AM
செஞ்சி : களையூர் கூட்ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பைக் மீது மோதியதில் ஒருவர் இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோட்டில் களையூர் கூட்ரோடு உள்ளது. இங்கு 200 மீட்டர் துாரத்திற்கு சாலை வழவழப்பாக இருப்பதால் லேசான மழை பெய்தாலும் சாலையில் செல்லும் வாகனங்கள் பிரேக் பிடித்தாலும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை 4:30 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்ற அரசு ஏசி பஸ் இந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழுந்து நாட்டார்மங்கலத்தில் இருந்து வந்து பைக்கில் வந்த வடவானுார் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 40; என்பவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த செந்தில், 40: படுகாயம் அடைந்தார். உடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சாலை மறியல்
இந்த வழவழப்பான சாலையில் தொடர் விபத்து ஏற்படுவதை கண்டு கொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாலை 5:00 மணிக்கு வடவானுார் கூட்ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்து வந்த செஞ்சி போலீசார், பொது மக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர். அதன்பிறகு 5:30 மணியளவில் போக்குவரத்து சீரடைந்தது.
விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.