/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிவன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு கண்டமங்கலத்தில் துணிகரம்

ADDED : ஆக 08, 2025 02:38 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் சிவன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் அருகில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் திரிபுரசுந்தரி சமேத திருநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஜூன் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 18 மாதங்களாக உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர்.
இது குறித்து கோயில் பூசாரி வேலுசாமி கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார், விசாரணை செய்தனர். உண்டியலில் காணிக்கை பணம் ரூ.75 ஆயிரம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
கொள்ளையர்கள் உண்டியலை உடைக்கும்போது அருகில் வசிப்பவர்கள் சத்தம்கேட்டு வெளியே வராத வகையில், கோவில் அருகில் உள்ள இரண்டு வீடுகளின் கதவுகளை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.