/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை சீரமைக்காததை கண்டித்து மறியல் செய்ய முடிவு
/
சாலை சீரமைக்காததை கண்டித்து மறியல் செய்ய முடிவு
ADDED : பிப் 09, 2024 11:15 PM
திண்டிவனம்: திண்டிவனம் பெலாக்குப்பம் சாலை சீரமைக்காததை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியல் செய்வது என முடிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் நகராட்சி 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் சார்பில் கூட்டம் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் வடபழனி தலைமை தாங்கினார். அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெலாக்குப்பம் பிரதான சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதாக கூறி, ஒன்றரை கிலோ மீட்டர் துாரமுள்ள சாலையை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
சாலையை சீரமைக்கக்கோரி, அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. வரும் 15ம் தேதிக்குள் சாலையை சீரமைக்காவிட்டால், வரும் 19ம் தேதி நான்கு வார்டு பொது மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தவது என முடிவு செய்யப்பட்டது.