செஞ்சி : வல்லம் அடுத்த அகலுார் ஊராட்சியில், வட்டார வேளாண் துறை சார்பில், வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் வயல் விழா நடந்தது.
ஒன்றிய துணைச் சேர்மன் மலர்விழி அண்ணா துரை தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் பெரியகுழந்தை முன்னிலை வகித்தார். கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் டாக்டர் துரைசாமி நெற்பயிரில் பாதிக்கக்கூடிய பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை வழி மேலாண்மை முறை, எலி ஒழிப்பு மேலாண்மை, நெல் வயலில் பச்சை பாசி மேலாண்மை குறித்து விளக்கி பேசினார்.
வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும் விளக்கினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி, உதவி வேளாண் அலுவலர் ஜீவா மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.