/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் சைக்கிள் கடை குடோனில் தீ விபத்து
/
செஞ்சியில் சைக்கிள் கடை குடோனில் தீ விபத்து
ADDED : நவ 03, 2024 05:26 AM

செஞ்சி: செஞ்சி பஸ் நிலையம் எதிரே உள்ள சைக்கிள் கடையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
செஞ்சி, காந்தி பஜாரில் பஸ் நிலையம் எதிரே 3 மாடி கட்டடத்தில் தரைதளத்தில் மொபைல் கடையும், அதனுடன் இணைந்து சைக்கிள் மற்றும் உதிரி பாகங்கள், பேன்சி பொருட்கள் கடை உள்ளது.
இந்த கடை பொருட்களுக்கான குடோன் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் உள்ளது. நேற்று இரவு 7:40 மணியளவில் முதல் தளத்தில் சைக்கிள் டயர் மற்றும் பேன்சி பொருட்கள் இருந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த செஞ்சி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
செஞ்சி போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பத்தினால் பஸ் நிலையம் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.