sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோட்டக்குப்பத்தில் ரவுடி வெட்டி கொலை 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

/

 கோட்டக்குப்பத்தில் ரவுடி வெட்டி கொலை 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

 கோட்டக்குப்பத்தில் ரவுடி வெட்டி கொலை 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

 கோட்டக்குப்பத்தில் ரவுடி வெட்டி கொலை 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்


ADDED : ஜன 29, 2026 06:26 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்:கோட்டகுப்பம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கும்ப லை போலீசார் தேடி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ராயர் மகன் அப்பு (எ) ஜவகர், 24; இவர் மீது மூன்று கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் உள்ள பே க்கரியை உடைத்த வழக்கில், புதுச்சேரி போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, தப்பியோடினார்.

அதில் அவரது கை உடைந்ததோடு முத்தியால்பேட்டை போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 10;00 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்ன பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்து கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

தகவலறிந்த கோட்டக் குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன கோட்டக்குப்பத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில், அப்புவுக்கும், கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் பிரச்னை ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். அந்த முன்விரோதம் காரணமாக அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை வழக்கு சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்து விட்டு தப்பித்த கும்பலை தேடி வருகின்றனர். ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us