/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் சீ ட்டு வாங்கி தருவதாக கூறி புரோக்கர் கும்பல் அட்டூழியம்
/
அரசு கல்லுாரியில் சீ ட்டு வாங்கி தருவதாக கூறி புரோக்கர் கும்பல் அட்டூழியம்
அரசு கல்லுாரியில் சீ ட்டு வாங்கி தருவதாக கூறி புரோக்கர் கும்பல் அட்டூழியம்
அரசு கல்லுாரியில் சீ ட்டு வாங்கி தருவதாக கூறி புரோக்கர் கும்பல் அட்டூழியம்
ADDED : ஜூலை 01, 2025 01:45 AM
விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து முதலாம் ஆண்டு வகுப்பு நேற்று துவங்கியது. இதை அறிந்த கிராமப்புற மாணவர்கள், தங்களின் பெற்றோரோடு நேற்று இக்கல்லுாரி வளாகத்திற்கு படையெடுத்து வந்தனர். இவர்களிடம், கல்லுாரி நிர்வாகம் தரப்பில் பேராசிரியர்கள் பேசினர். அப்போது, இன்னும் இரு கட்ட கவுன்சிலிங் உள்ளதாகவும், அடை முடிந்த பின்பு வராண்டா சேர்க்கை உள்ளது. தரவரிசை மதிப்பெண்படி கவுன்சிலிங் அழைப்பு வரும் என கூறி அனுப்பி வைத்தனர்.
அப்போது கல்லுாரி வளாகம் வெளியே நின்றிருந்த புரோக்கர்கள் சிலர் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களிடம் சென்று, மாணவர் விரும்பும் பாடப்பிரிவில் சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 ஆயிரம் ஆகும் என கூறுகின்றனர். இதை கேட்ட, விபரம் தெரிந்த பெற்றோர் ஒருவர், குறுக்கீட்டு பணம் கொடுத்து ஏமாறா வேண்டும் என கிராமப்புற பெற்றோரிடம் விபரத்தை கூறினார். இதனால், ஆத்திரமடைந்த புரோக்கர்கள் சேர்ந்து, பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புரோக்கர்கள் அரசு கலை கல்லுாரி அருகே நின்று கொண்டு, மாணவர்களின் சேர்க்கை ஆசையை புரிந்து கொண்டு, சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், கல்லுாரி நிர்வாகம், மாணவர்கள் மதிப்பெண் தரவரிசை படி , கவுன்சிலிங் அழைப்பாணை வீட்டிற்கு வரும். யாராவது ஆசைவார்த்தை கூறினால், அதை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லுாரியில் சீட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, பெற்றோர்கள் உஷாராக இருந்து தங்களின் பிள்ளைகளை கல்லுாரியில் சேர்ப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.