sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்

/

 செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்

 செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்

 செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்


ADDED : நவ 25, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வ ரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையின் வீரம் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், செல்லப்பிராணியின் மீதான பாசம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி., 1750 ல் நடந்த போரில் செஞ்சி கோட்டை பிரஞ்சுக்காரர்களிடம் இருந்து ஆங்கிலேயர் வசமானது. இதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர்.

ஆடம்பரத்திலும், இயற்கையை ரசிப்பதிலும் ஆர்வம் கொண்ட ஆங்கிலேயர்கள் செஞ்சியில் தங்கி நிர்வாகத்தை கவனிக்க சங்கராபரணி ஆற்றங்கரையில் இரண்டு பிரிவுகளை கொண்ட சொகுசு பங்களாவை கட்டினர். கி.பி.,1914ம் ஆண்டு செஞ்சியில் அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த பிரண்டா என்ற நாய்க்கு சொகுசு பங்களாவின் அருகில் கல்லறை கட்டி உள்ளார்.

3.25 மீட்டர் நீளமும் 2.70 மீட்டர் அகளமும் கொண்ட கல்லறையின் மேலே அழகாக வடிவமைக்கப்பட்ட கிரானைட் கல்லில் 1.20 மீட்டர் நீளத்தில் கல்லறை அமைத்துள்ளார். கல்லறை மீது பிரண்டா ஏ டியர் டாக், 26 நவ.1914 என எழுதி உள்ளனர். நாளையுடன் இந்த கல்லறை தனது 112வது வயதை நிறைவு செய்கிறது.

தற்போது கல்லறை அருகே உள்ள பயணியர் விடுதியை நெடுஞ்சாலைத்துறையினர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து பராமரித்து வருகின்றனர். இங்கு, கவர்னர், முதல் அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் தங்கி செல்கின் றனர்.

பங்களாவை பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த கல்லறையையும் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

இங்கு வரும் பெரும்பாலானவர்கள் செல்லப்பிராணியின் கல்லறையை நெகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். செஞ்சி கோட்டை வீரத்திற்கு மட்டுமின்றி, பாசத்திற்கும் பெயர் போன இடம் என்பதை செல்ல பிராணியின் கல்லறை பல நுாற்றாண்டுகளை கடந்தும் பறைசாற்றி வருகிறது.






      Dinamalar
      Follow us