/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு; உடலில் எண்ணெய் தடவிய நபர் துணிகரம்

ADDED : ஏப் 02, 2025 03:36 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து துாங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற உடல் முழுதும் எண்ணெய் தடவிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 40; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் துாங்கினார்.
நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர், காவியா அணிந்திருந்த மூன்றரை சவரன் தாலிச் செயினை பறித்தார்.
திடுக்கிட்டு எழுந்த காவியா கூச்சலிட்டபடி மர்ம நபரின் கையை பிடித்தார். ஆனால் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்திருந்த மர்ம நபர் பெண்ணின் கையை உதறித் தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றார்.
குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு மர்ம நபரை பிடிப்பதற்குள் தலைமறைவானார்.
இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.