/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி ஆசிரியையிடம் போதையில் தகராறு செய்தவர் சிறையில் அடைப்பு
/
பள்ளி ஆசிரியையிடம் போதையில் தகராறு செய்தவர் சிறையில் அடைப்பு
பள்ளி ஆசிரியையிடம் போதையில் தகராறு செய்தவர் சிறையில் அடைப்பு
பள்ளி ஆசிரியையிடம் போதையில் தகராறு செய்தவர் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 11, 2024 10:18 PM
கண்டாச்சிபுரம் : பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை ஊராட்சிக்கு உட்பட்ட பீமாபுரம் தொடக்கப் பள்ளியில்,இடைநிலை ஆசிரியையாக பணிபுரிபவர் அமுதா, 50; இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது பீமாபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சந்திரசேகர், 39; என்பவர் குடிபோதையில் வகுப்பறையில் வந்து ஆசிரியை அமுதாவிடம் தகராறு செய்தார்.இதனால் மாணவ,மாணவிகள் அலறிக்கொண்டு வகுப்பறையைவிட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்தும் ஆசிரியை அமுதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கலாட்டா செய்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை அமுதா கண்டாச்சிபுரம் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் சந்திரசேகரை கைது செய்து சிறையிலடைத்தனர்.