sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர் கார் மோதி பலி

/

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர் கார் மோதி பலி

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர் கார் மோதி பலி

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர் கார் மோதி பலி


ADDED : அக் 18, 2024 07:14 AM

Google News

ADDED : அக் 18, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: தீயணைப்புத் துறையில் பணிக்கு தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்த வாலிபர் கார் மோதி இறந்தார்.

மேல்மலையனுார் அடுத்த ஆத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் அசோக்குமார், 27; பி.இ., பட்டதாரி. இவர், தீயணைப்புத்துறை பணிக்கு தேர்வாகி இருந்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்காக, ஆத்திப்பட்டில் இருந்து செஞ்சி செல்ல நேற்று காலை 7:00 மணியளவில் கடலாடிகுளம் கூட்ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்குச் சென்ற கார் மோதி விட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்த கொழப்பலுார் கிராமத்தைச் சேர்ந்த வினாயகசுந்தரம், 65; என்பவர் மீதும் மோதியது.

இதில், அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வினாயகசுந்தரம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us