/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி

ADDED : அக் 05, 2024 04:19 AM

விழுப்புரம் : மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை சென்னைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கடந்த செப்டம்பர் 11ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 707 பேர் தேர்வாகினர். இவர்கள், சென்னையில் கடந்த 4ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்கின்றனர்.
தேர்வானவர்கள் நேற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதல் கட்டமாக 60 வீரர், வீராங்கனைகள் சென்றனர். விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நேற்று காலை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பழனி வாழத்தியும், சீருடைகள் வழங்கியும், வழியனுப்பி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, வாலிபால் சங்க செயலாளர் மணி மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.