ADDED : செப் 25, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : மிலாது நபியை முன்னிட்டு செஞ்சி, திருவண்ணாமலை ரோடு இனாம் பள்ளி வாசலில் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி கவுன்சிலர் ஜான் பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் பொது விருந்தை துவக்கி வைத்தார்.
பள்ளி வாசல் நிர்வாகிகள் அப்துல் ஜாபர், சவுகத் அலி, அப்துல் ஜலீல், பாஷா, சர்தார் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு பொது மக்களும் பங்கேற்றனர்.