/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே ஊழியரின் வீட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
/
ரயில்வே ஊழியரின் வீட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
ரயில்வே ஊழியரின் வீட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
ரயில்வே ஊழியரின் வீட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
ADDED : டிச 08, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியை சேர்ந்தவர் பரணி,27; ரயில்வே ஊழியர். இவரது வீட்டில் உள்ள பீரோவிற்கு கீழே, நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு 4 அடிநீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது.
இதையறிந்த, பரணி குடும்பத்தார், வீட்டை விட்டு அலறியடித்து கொண்டு வெளியேறினர். பின், அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜமுனாராணி, தலைமையிலான வீரர்கள், வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்து, அருகேவுள்ள காப்பு காட்டு பகுதியில் விட்டனர்.