/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி
/
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி
ADDED : நவ 12, 2024 08:20 PM
மரக்காணம்; மரக்காணம் அருகே சவ ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மரக்காணம் அடுத்த ஏந்துார் கிராமத்தில், கடந்த 5ம் தேதி இறந்துபோன காளி என்பவரின் சவ ஊர்வலத்தின் போது அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் விக்னேஷ்,22; ஒரு கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு மற்றெரு கையால் பட்டாசுகளை வெடித்துள்ளார்.
அப்பொழுது கையில் வைத்திருந்த பட்டாசில் தீ பொறிவிழுந்ததில் அனைத்து பட்டாசுகளும்வெடித்தது.
இதில் தீ காயமடைந்த விக்னேஷை சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.