ADDED : பிப் 01, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை,: வளத்தி அருகே டிராக்டர் பின்னால் பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
வளத்தி அடுத்த கன்னலம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமியின் மகன் ராமன், 32. இவரது பைக்கில் நேற்று முன்தினம் மாலை 3;00, மணிக்கு நீலாம்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அன்னமங்கலத்திலிருந்து ஓரு டிராக்டர் மெயின் ரோட்டிற்கு திரும்பியது.
அப்போது டிராக்டர் பின்னால் பைக் மோதியதில் பலத்த அடிபட்ட ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.