/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை
/
காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை
ADDED : பிப் 01, 2024 01:47 AM

விழுப்புரம்:செஞ்சிக் கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
செஞ்சி, மலைக்கோட்டையில் 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
புதுச்சேரி ஜெயகணேஷ் நகர், களத்துமேடு பகுதியைச் சேர்ந்த விஜி, 34, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண், கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரிஹானா பர்வீன்,27 என்பதும், விஜியின் காதலி என்பதும் தெரிந்தது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ரிஹானா பர்வீனை செஞ்சி மலைக்கோட்டைக்கு அழைத்து வந்த விஜி, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ், குற்றவாளி விஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்தார்.