/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்
/
மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்
ADDED : பிப் 23, 2024 03:42 AM

மாற்றுத் திறனாளிக்கு பாரதிய ஜனதா பிரமுகர் முயற்சியால் மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் கதிர்வேல், 40; மாற்றுத் திறனாளி. இவருக்கு மாநில அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மூன்று சக்கர வாகனம் வழங்குவதற்கு செஞ்சி மேற்கு ஒன்றிய பா.ஜ., முன்னாள் தலைவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபு முயற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து கதிர்வேலுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மூன்று சக்கர கை சைக்கிள் வழங்க தேர்வானார்.
கதிர்வேலிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமுவேல், பா.ஜ., செயற்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் மூன்று சக்கர கை சைக்கிளை வழங்கினர்.