/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உண்டியல் உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
உண்டியல் உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 01, 2025 05:08 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வ.உ.சி., தெருவில் செல்வ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி விழுப்புரம் கம்பன் நகரை சேர்ந்த இளங்கோ,58; நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடித்து பூட்டி சென்றார்.
நேற்று காலை 6.30 மணிக்கு கோவிலை திறக்க வந்தபோது, முன்பக்க இரும்பு கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கோவில் உண்டியல் உடைத்து அதில் இருந்த காணிக்கை திருடப்பட்டு இருந்தது.
விழுப்புரம் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து உண்டியல் உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.