ADDED : மார் 19, 2024 10:52 PM
லோச்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க.,வில் 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்ற திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், தி.மு.க., நிர்வாகிகள் வீடுதோறும் சென்று, தி.மு.க., ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.
ஆனால், திண்ணை பிரசாரத்திற்கு செல்பவர்கள் அவர்கள் தங்கள் கட்சி சாதனைகளைக் கூறும் முன்பே, 'போன மாசத்தில் இருந்து ஓ.ஏ.பி.,வரல, பட்டா மாத்த கொடுத்து ஒரு வருஷம் ஆகியும் மாத்தி தரல. புது ரேஷன் கார்டு கேட்டு எழுதி கொடுத்து மூணு மாசம் ஆச்சு, தெருவுல சாக்கடை தண்ணி தேங்குதுன்னு பொதுமக்கள் வரிசையா குறைகளை அடுக்கிவிட்டு இதையெல்லாம் மொதல்ல சரி செய்யுங்க' என்கின்றனர்.
என்னதான் அதிகாரிங்கள வச்சு ஊரஊரா குறைகேட்புக் கூட்டம் நடத்தினாலும், கொடுத்த மனுக்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இந்த திட்டத்திற்கு 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்று வைத்ததற்கு பதில், 'இல்லம் தோறும் மக்கள் குரல்' என பெயர் வைத்திருக்கலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

