ADDED : மார் 10, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், : கோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்ககோரி திருவெண்ணெய்நல்லுார் வழக்கறிஞர் சங்கம், புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டம் நடந்தது.
புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ராஜாராம் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தன், திருவெண்ணெய்நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியை தமிழ் மொழியாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து பேசினர்.

