/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; வல்லம் ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு

ADDED : ஜன 24, 2025 11:49 PM

செஞ்சி; விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
வல்லம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அதன் தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
பி.டி.ஓ., இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ., ராஜகோபால் வரவேற்றார். ஒன்றிய வரவு செலவுகளுக்கும், வளர்ச்சிப் பணிகள் தேர்வு செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து பேசிய ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு வல்லம் ஒன்றிய குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், முதல்வரின் நிகழ்ச்சிகளில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். இக்கூட்டத்தில் துணை சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, கவுன்சிலர்கள் கோபால், ஏழுமலை, பத்மநாபன், பிரபாகரன், சிலம்பரசி, விஜயா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏ.பி.டி.ஓ., சவுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.