/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் மாதந்தோறும் தவிப்பிற்கு உள்ளாகும் பெண் போலீஸ்
/
மேல்மலையனுாரில் மாதந்தோறும் தவிப்பிற்கு உள்ளாகும் பெண் போலீஸ்
மேல்மலையனுாரில் மாதந்தோறும் தவிப்பிற்கு உள்ளாகும் பெண் போலீஸ்
மேல்மலையனுாரில் மாதந்தோறும் தவிப்பிற்கு உள்ளாகும் பெண் போலீஸ்
ADDED : அக் 07, 2024 11:02 PM
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்து கின்றனர். இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அமாவாசையன்று காலையில் துவங்கி நள்ளிரவு 2 மணிவரை பக்தர்கள் வருகின்றனர். மறுநாள் காலைவரை பக்தர்கள் திரும்பி செல்கின்றனர்.
இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்தும், மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர். இதில் 40 சதவீதம் பெண் போலீசார் வருகின்றனர்.
இவர்களை காலை 8 மணிக்கு மேல்மலையனுாரில் பணிக்கு சீருடையில் பணிக்கு வந்து விடுகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஊஞ்சல் முடிந்து பக்தர்கள் கூட்டம் குறையும் வரை இரவு 2 மணிவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் பாதுகாப்பிற்கு நிற்கும் இடங்களில் போதிய கழிப்பிட வசதி இருப்பதில்லை. கிட்டதட்ட 18 மணி நேரம் சீருடையில் பெண் போலீசார் அவதிப்படுகின்றனர். இதனால் முழு ஈடுபாடுடன் வேலை செய்ய முடியாமல், மன உலைச்சலுக்கு ஆளாகி கூட்டம் வரும் நேரத்தில் சோர்ந்து போய் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு பெண் போலீசாரை இரண்டு பிரிவாக பிரித்து காலையில் மிக குறைந்த அளவில் பணிக்கு வரை வழைத்து, அவர்களை மாலை 6 மணிக்கு பணி முடித்து அனுப்பி விடலாம். கூட்டம் அதிகம் வர துவங்கும் மாலை 6 மணிக்கு அதிக அளவில் பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால் சோர்வில்லாமல் பணியில் ஈடுபடுவர்கள், வீண் மன உலைச்சலுக்கும் ஆளாகாமல் பணி சிறப்பாக செய்ய வழி கிடைக்கும்.