/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி வேன் மீது 'எம்.சாண்ட்' லோடு லாரி மோதல் தொழிலாளி பலி ; 16 பேர் படுகாயம்
/
மினி வேன் மீது 'எம்.சாண்ட்' லோடு லாரி மோதல் தொழிலாளி பலி ; 16 பேர் படுகாயம்
மினி வேன் மீது 'எம்.சாண்ட்' லோடு லாரி மோதல் தொழிலாளி பலி ; 16 பேர் படுகாயம்
மினி வேன் மீது 'எம்.சாண்ட்' லோடு லாரி மோதல் தொழிலாளி பலி ; 16 பேர் படுகாயம்
ADDED : மார் 14, 2026 05:46 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 'எம்.சாண்ட்' லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி, மினி வேன் மீது மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 16 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 20 பேர், நேற்று காலை 5:30 மணிக்கு, விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்துார் பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக மினி வேனில் சென்றனர்.
கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், கோலியனுார் அடுத்த வாணியம்பாளையம் சர்வீஸ் சாலை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த 'எம்.சாண்ட்' லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி மினி வேன் பின்னால் மோதியது.
மோதிய வேகத்தில் மினி லாரி சாலையோரம் இருந்த வீட்டின் ஒரு பகுதியில் மோதி சேதத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் மினி வேனில் வந்த தட்சணாமூர்த்தி, 47; பாட்டாபி, 56; அங்கம்மாள், 45; சேகர், 62; உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வளவனுார் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார்.
விபத்து குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ., ஆறுதல் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனையில் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா, டாக்டர் சவுந்தர்ராஜன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோரிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். கண்டமங்கலம் சேர்மன் வாசன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, வழக்கறிஞர் கண்ணப்பன் உடனிருந்தனர்.

