ADDED : ஜூன் 25, 2026 04:16 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், சடையம்பட்டி அடுத்த நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அருள், 25; இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் ரயிலில், பொது பெட்டியில் பயணம் செய்தார். இந்நிலையில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆத்திப்பட்டு அருகே சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில், படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், அருண் உடலை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
