/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
/
ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
ADDED : அக் 22, 2025 12:21 AM
விழுப்புரம்: நண்பர்களோடு ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம், சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முத்துவேல்,32; இவர் தனது அண்ணன் சக்திவேல் மற்றும் நண்பர்கள் சின்னராசு, வைத்தியலிங்கம், காத்தமுத்து ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு, திருப்பாச்சனுார் கிராமத்தில் உள்ள மலட்டாறு பாலம் அருகேவுள்ள தண்ணீரில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி முத்துவேல் தண்ணீரில் மூழ்கினார். அவரை, உடனிருந்தவர்கள் தேடியும் கிடைக்காததால், விழுப்புரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்துவேலை தண்ணீரிலிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, முத்துவேலை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்ததை உறுதி செய்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.