/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காய்ச்சலால் பாதித்த வாலிபர் தற்கொலை
/
காய்ச்சலால் பாதித்த வாலிபர் தற்கொலை
ADDED : மே 10, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் காய்ச்சலால் பாதித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஆனந்தராஜ், 24; நிதி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த இவர், நேற்று அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.