/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிப்பறி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
/
வழிப்பறி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஜன 22, 2025 09:11 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே, இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வாலிபர், மின்சாரம் தாக்கி இறந்தார்.
திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகன் சூர்யா,24; இவர் நேற்று முன்தினம் இரவு பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன்,24; என்பவருடன், திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியுள்ளார்.
இருவரும் இரவு 11.00 மணிக்கு மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் ஒரத்தி கிராமத்திற்கு நண்பரை பார்க்க சென்று, திண்டிவனம் நோக்கி வந்தனர்.
கீழ் அத்திவாக்கம் அருகே வந்த போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனது. அப்போது, அவ்வழியே வந்த நபரிடம் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களை, அந்த ஊர் மக்கள் துரத்தியதால் தப்பிச் சென்றனர்.
அதிகாலை 4.00 மணிக்கு ஒலக்கூர் எல்லை அருகே சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாய நிலம் வழியே இருவரும் வந்தனர்.
அப்போது, வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் சிக்கிய சூர்யா, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடன் வந்த மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், ஒலக்கூர் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.