/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பானிபூரியில் மயக்க மருந்து கொடுத்து தம்பதியிடம் ரூ.1 லட்சம் நகை 'அபேஸ்'

ADDED : ஜன 13, 2024 07:26 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த அருளவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி தேவகி, 55; இவர், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், நடைபாதையோரம் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருடன், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த சில தினங்களாக பழகி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன், தேவகி வீட்டிற்குச் சென்ற அந்த பெண், பானிபூரி பார்சல் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனை தேவகியும், கணவர் சுப்ரமணியும் சாப்பிட்ட சற்று நேரத்தில் இருவரும் மயக்கமடைந்தனர். உடன் அந்த பெண், தேவகி அணிந்திருந்த 4 சவரன் தங்க செயின் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பினார்.
நீண்டநேரம் கழித்து மயக்கம் தெளிந்து தேவகியும், சுப்ரமணியும் எழுந்து பார்த்தபோது பானிபூரியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை அந்த பெண் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண்ணைத் தேடி வருகின்றனர்.