/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ்
/
பஸ்சில் மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ்
ADDED : செப் 06, 2025 08:08 AM
விழுப்புரம்; பஸ்சில் மூதாட்டியிடம் பணம், நகைகளை பெண்கள் திருடியது குறித்து விசாரிக்கின்றனர்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி செந்தாமரை, 60; இவர் தனது கணவருடன், நேற்று முன்தினம் அரசு விரைவு பஸ்சில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்திற்கு சென்றார். பஸ்சில் செந்தாமரை அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் கூட்டேரிப்பட்டு அருகே சில்லறை நாணயங்களை கீழே போட்டுவிட்டு உங்களுடையதா என அவரிடம் கேட்டனர்.
இந்நிலையில் செந்தாமரை கீழே பார்த்தபோது, அவரது பையில் இருந்த 6 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர்.
விழுப்புரம் வந்து தனது பையை செந்தாமரை பார்த்தபோது நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.