/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் சிக்கிய குதிரை பராமரிப்பு இன்றி இறப்பு
/
விபத்தில் சிக்கிய குதிரை பராமரிப்பு இன்றி இறப்பு
ADDED : அக் 07, 2024 11:02 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கிய குதிரை உரிய பராமரிப்பின்றி நேற்று இறந்தது.
காணை கிராமத்தில் அழகுநாச்சியம்மன் கோவிலுக்கு வேண்டுதலின் பேரில், விடப்பட்ட வெள்ளை குதிரை சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில், குதிரையில் முன்புற கால் முறிந்தது.
காயமடைந்த குதிரைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், அதனால் நடக்க முடியவில்லை. குதிரையை மீட்டு பராமரிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 5 நாட்களாக காயமடைந்த நிலையிலிருந்த குதிரை, நேற்று காலை இறந்தது.
அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இறந்த குதிரைக்கு இறுதி சடங்குகள் செய்து, ஏரிக்கரை அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில் புதைத்தனர்.
வனத்துறை விளக்கம்
வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் குதிரை வருவதில்லை. காயமடைந்த குதிரைக்கு சிகிச்சை என்றால் கால்நடை மருத்துவர்கள் தான் செய்ய வேண்டும் என்றனர்.