/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : மே 02, 2025 05:08 AM
விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் தினத்தன்று 64 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி ஆய்வு செய்தனர். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய 118 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், 20 நிறுவனங்கள் மற்றும் 40 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 64 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் முறை அகற்றுதல் மற்றும் தமிழில் முதன்மையாக பெயர் பலகை வைத்தல் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.