/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குவாரி, கிரஷர்களுக்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை
/
குவாரி, கிரஷர்களுக்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை
குவாரி, கிரஷர்களுக்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை
குவாரி, கிரஷர்களுக்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை
ADDED : டிச 20, 2024 04:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் குவாரி, கிரஷர்களுக்கு உரிமம் பெற்று செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
கல் அரவை தொழிலகங்கள் (கிரஷர்), கற்கள் மெருகூட்டும் தொழிலகங்கள், அனைத்தும் சுற்றுச்சூழல் விதி 1986ல் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, சம்மந்தப்பட்ட துறையினரிடமிருந்து கிரஷர் இயக்குவதற்கான உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.
தயாரிக்கப்படும் ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட், டஸ்ட் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைத்து பயன்படுத்திட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் படியும், கனிமங்களை இருப்பு வைத்தல் மற்றும் கனிம விநியோகம் குறித்தான தமிழ்நாடு விதிகள் படியும், கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.
புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் பெற நில ஆவணங்களுடன், விண்ணப்ப கட்டணம் 10 ஆயிரம் ரூபாயுடன் இந்திய சுரங்க மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் அறிக்கை பெற்று, ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகளில் மின்னணு எடைமேடை பொருத்த வேண்டும்.
ஜல்லிகற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட், டஸ்ட் பவுடர் விற்பனை செய்வதற்கும், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் உரிய அனுமதி நடைச்சீட்டு பெற்ற பின்னர் எடுத்துச் செல்ல வேண்டும். தணிக்கை செய்யும்போது, இந்த உரிமம் பெறாமல் இயங்கினால், சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.